×

குப்பை தொட்டியை கூட சரியாக பராமரிக்கவில்லை 10 ஆண்டில் அதிமுக அரசு செய்த சாதனைகள் என்ன? கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் கேள்வி

திருச்சி, மார்ச் 30: திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்குசேகரித்த திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் குப்பை தொட்டியை கூட சரியாக பராமரிக்காத அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன என்று கேள்வி எழுப்பினார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று நத்தர்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதி முழுவதும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேசும்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் கிழக்கு தொகுதி முழுவதும் சீரமைத்து மாற்றுவதே எனது முதன்மை கொள்கை என்று கூறினார். பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர். தொடர்ந்து மாலை கீழப்புதூர், காஜாபேட்டை, கான்மியான் மேட்டுத்தெரு, கல்லுக்காரதெரு, ஆட்டுக்காரத்தெரு, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், ஸ்வச் பாரத்திட்டத்தின் கீழ் முதல் 10 தூய்மையான நகரங்களில் ஒன்றாக இடம் பிடித்தது என திருச்சியை கூறி சுகாதார சீர்கேடுகளின் ஒட்டு மொத்த அடையாளமாக திருச்சியை மாற்றி உள்ளது தான் அதிமுக, பாஜக கூட்டணியின் சாதனை.

குப்பை தொட்டிகளை கூட முறையாக பராமரிக்க முடியாத அதிமுக அரசு மக்கள் நல திட்டங்கள் எப்படி செயல்படுத்துவார்கள் என்று கூறினார். கடந்த 10 ஆண்டாக அதிமுக அரசு செய்த சாதனை என்ன என மக்களிடம் கேள்வி எழுப்பினார். பிரசாரத்தின் போது, பகுதி செயலாளர் மண்டி சேகர், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மதிமுக மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Iniko Cardiaraj ,
× RELATED கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்